நூல்கள்›நற்றிணை›பாடல் 1434

பாடல் 1434

பேரி சாத்தனார்

பூம் பொறி உழுவைப் பேழ் வாய்ஏற்றை

தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே,

துறுகல் மீமிசை, உறுகண் அஞ்சாக்

குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த

தொண்டகச் சிறு பறைப் பாணி அயலது . . . .

பைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்

ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும்

யானே அன்றியும் உளர்கொல்- பானாள்,

பாம்புடை விடர ஓங்கு மலை மிளிர,

உருமு சிவந்து எறியும் பொழுதொடு, பெரு நீர் . . . .

போக்கு அற விலங்கிய சாரல்,

நோக்கு அருஞ் சிறு நெறி நினையுமோரே?

குறிஞ்சி

← பாடல் 1433பாடல் 1435 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்