நூல்கள்›நற்றிணை›பாடல் 1433

பாடல் 1433

மருதன் இள நாகனார்

ஒன்று தெரிந்து உரைத்திசின்- நெஞ்சே! புன் கால்

சிறியிலை வேம்பின் பெரிய கொன்று,

கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின்

களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து,

பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் . . . .

பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய்

மாயா வேட்டம் போகிய கணவன்

பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும்

விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே;

ஆள்வினைக்கு அகல்வாம் எனினும், . . . .

மீள்வாம் எனினும், நீ துணிந்ததுவே.

பாலை

← பாடல் 1432பாடல் 1434 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்