நூல்கள்›நற்றிணை›பாடல் 1430

பாடல் 1430

பரணர்

உள்ளுதொறும் நகுவேன்- தோழி!- வள்உகிர்

மாரிக் கொக்கின் கூரல் அன்ன

குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்

தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்

வான் கோல் எல் வளை வெளவிய பூசல் . . . .

சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின்

மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப்

பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்

தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்

புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் . . . .

மண் ஆர் கண்ணின் அதிரும்,

நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.

மருதம்

← பாடல் 1429பாடல் 1431 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்