நூல்கள்›நற்றிணை›பாடல் 1427

பாடல் 1427

மாறன் வழுதி

அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா

எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு,

பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்,

தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே;

அதனினும் கொடியள் தானே, 'மதனின் . . . .

துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு

பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?' என

வண்டு சூழ் வட்டியள் திரிதரும்

தண்டலை உழவர் தனி மட மகளே.

முல்லை

← பாடல் 1426பாடல் 1428 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்