நூல்கள்›நற்றிணை›பாடல் 1424

பாடல் 1424

இளந்திரையனார்

நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,

காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;

யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-

கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ

மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப் . . . .

புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்

என்ன மகன்கொல்- தோழி!- தன்வயின்

ஆர்வம் உடையர் ஆகி,

மார்பு அணங்குறுநரை அறியாதோனே!

நெய்தல்

← பாடல் 1423பாடல் 1425 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்