நூல்கள்›நற்றிணை›பாடல் 1412

பாடல் 1412

அம்மூவனார்

நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த

வேய் வனப்புற்ற தோளை நீயே,

என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி!

முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின்

உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே- . . . .

போகிய நாகப் போக்கு அருங் கவலை,

சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்

சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண,

வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ,

கோள் நாய் கொண்ட கொள்ளைக் . . . .

கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே.

குறிஞ்சி

← பாடல் 1411பாடல் 1413 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்