நூல்கள்›நற்றிணை›பாடல் 1411

பாடல் 1411

அகம்பல்மால் ஆதனார்

இரு நிலம் குறையக் கொட்டிப்பரிந்தின்று

ஆதி போகிய அசைவு இல் நோன் தாள்,

மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி

கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப,

பூண்கதில்- பாக!- நின் தேரே: பூண் தாழ் . . . .

ஆக வன முலைக் கரைவலம் தெறிப்ப

அழுதனள் உறையும் அம் மா அரிவை

விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய

முறுவல் இன் நகை காண்கம்!-

உறு பகை தணித்தனன், உரவு வாள் வேந்தே. . . . .

முல்லை

← பாடல் 1410பாடல் 1412 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்