நூல்கள்›நற்றிணை›பாடல் 1410

பாடல் 1410

பூதன்தேவனார்

'மன்ற எருமை மலர் தலைக் காரான்

இன் தீம் பாற்பயம் கொண்மார், கன்று விட்டு,

ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்

பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து,

தழையும் தாரும் தந்தனன், இவன்' என, . . . .

இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,

தைஇத் திங்கள் தண் கயம் படியும்

பெருந் தோட் குறுமகள் அல்லது,

மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.

மருதம்

← பாடல் 1409பாடல் 1411 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்