பாடல் 1401
வண்ணப்புறக் கந்தரத்தனார்
மன்னாப் பொருட் பிணி முன்னி, 'இன்னதை
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து' எனப்
பல் மாண் இரத்திர்ஆயின், 'சென்ம்' என,
விடுநள் ஆதலும் உரியள்; விடினே,
கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று, . . . .
பிரிதல் வல்லிரோ- ஐய! செல்வர்
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ணப் புறவின் செங் காற் சேவல்
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல்
நும் இலள் புலம்பக் கேட்டொறும் . . . .
பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே?
பாலை