நூல்கள்›நற்றிணை›பாடல் 1400

பாடல் 1400

வெள்ளி வீதியார்

சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!

துறை போகு அறுவைத் தூ மடி அன்ன

நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!

எம் ஊர் வந்து, எம் உண்துறைத் துழைஇ,

சினைக் கௌற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி, . . . .

அனைய அன்பினையோ, பெரு மறவியையோ-

ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்

கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்

இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே!

மருதம்

← பாடல் 1399பாடல் 1401 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்