நூல்கள்›நற்றிணை›பாடல் 1396

பாடல் 1396

இனிசந்த நாகனார்

மிளகு பெய்தனைய சுவைய புன் காய்

உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட

புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன்

பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி,

புன் புறா உயவும் வெந் துகள் இயவின், . . . .

நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,

சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தனகொல்லோ-

கோதை மயங்கினும், குறுந் தொடி நெகிழினும்,

காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்,

மாண் நலம் கையறக் கலுழும் என் . . . .

மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே?

பாலை

← பாடல் 1395பாடல் 1397 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்