நூல்கள்›நற்றிணை›பாடல் 1394

பாடல் 1394

உலோச்சனார்

என்னர்ஆயினும் இனி நினைவு ஒழிக!

அன்னவாக இனையல்- தோழி!- யாம்

இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்?

மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்

அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் . . . .

வறனுற்று ஆர முருக்கி, பையென

மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என்

அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென,

வறிதால், இகுளை! என் யாக்கை; இனி அவர்

வரினும், நோய் மருந்து அல்லர்; வாராது . . . .

அவணர் ஆகுக, காதலர்! இவண் நம்

காமம் படர் அட வருந்திய

நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே!

குறிஞ்சி

← பாடல் 1393பாடல் 1395 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்