நூல்கள்›நற்றிணை›பாடல் 1388

பாடல் 1388

முதுகூற்றனார்

பெரு முது செல்வர் பொன்னுடைப்புதல்வர்

சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின்

கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,

கோல் கொண்டு அலைப்பப் படீஇயர்மாதோ-

வீரை வேண்மான் வெளியன் தித்தன் . . . .

முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்

வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப,

கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து,

அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை

நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன் . . . .

ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே!

நெய்தல்

← பாடல் 1387பாடல் 1389 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்