நூல்கள்›நற்றிணை›பாடல் 1389

பாடல் 1389

கபிலர்

உடும்பு கொலீஇ, வரி நுணல் அகழ்ந்து,

நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி,

எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல

பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து,

இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் . . . .

வன் புலக் காட்டு நாட்டதுவே- அன்பு கலந்து

நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து

உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை

நுண் முகை அவிழ்ந்த புறவின்

பொறை தலை மணந்தன்று; உயவுமார் இனியே. . . . .

முல்லை

← பாடல் 1388பாடல் 1390 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்