நூல்கள்›நற்றிணை›பாடல் 1387

பாடல் 1387

பொதும்பில் கிழார்

தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக்

குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென,

துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி

கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி,

வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால் . . . .

கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும்

மா மலை நாட! மருட்கை உடைத்தே-

செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம்

கொய் பதம் குறுகும்காலை, எம்

மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே! . . . .

குறிஞ்சி

← பாடல் 1386பாடல் 1388 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்