நூல்கள்›நற்றிணை›பாடல் 1378

பாடல் 1378

பாலை பாடிய பெருங்கடுங்கோ

அன்றை அனைய ஆகி, இன்றும், எம்

கண் உளபோலச் சுழலும்மாதோ-

புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ

வைகுறு மீனின் நினையத் தோன்றி,

புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடை, . . . .

கிடின்என இடிக்கும் கோல் தொடி மறவர்

வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது

அமரிடை உறுதர, நீக்கி, நீர்

எமரிடை உறுதர ஒளித்த காடே.

பாலை

← பாடல் 1377பாடல் 1379 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்