நூல்கள்›நற்றிணை›பாடல் 1377

பாடல் 1377

நல்வெள்ளியார்

பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி

உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,

நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்

பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யென

அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் . . . .

கானக நாடற்கு, 'இது என' யான் அது

கூறின் எவனோ- தோழி! வேறு உணர்ந்து,

அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி,

வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து,

அன்னை அயரும் முருகு நின் . . . .

பொன் நேர் பசலைக்கு உதவாமாறே?

குறிஞ்சி

← பாடல் 1376பாடல் 1378 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்