நூல்கள்›நற்றிணை›பாடல் 1360

பாடல் 1360

கொற்றனார்

கண்டனென்- மகிழ்ந!- கண்டு எவன்செய்கோ?-

பாணன் கையது பண்புடைச் சீறியாழ்

யாணர் வண்டின் இம்மென இமிரும்,

ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின்

மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர் . . . .

கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி-

கால் ஏமுற்ற பைதரு காலை,

கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு,

பலர் கொள் பலகை போல-

வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே . . . .

மருதம்

← பாடல் 1359பாடல் 1361 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்