நூல்கள்›நற்றிணை›பாடல் 1350

பாடல் 1350

ஓரம்போகியார்

ஐய! குறுமகட் கண்டிகும்: வைகி,

மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்

தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்

துளங்குஇயல் அசைவர, கலிங்கம் துயல்வர,

செறிதொடி தௌர்ப்ப வீசி, மறுகில், . . . .

பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கி,

சென்றனள்- வாழிய, மடந்தை!- நுண் பல்

சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்;

மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை,

பழம் பிணி வைகிய தோள் இணைக் . . . .

குழைந்த கோதை, கொடி முயங்கலளே.

மருதம்

← பாடல் 1349பாடல் 1351 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்