நூல்கள்›நற்றிணை›பாடல் 1349

பாடல் 1349

நக்கண்ணையார்

இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்

சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,

பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,

நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி,

விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப! . . . .

இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க,

செலீஇய சேறிஆயின், இவளே

வருவை ஆகிய சில் நாள்

வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே!

நெய்தல்

← பாடல் 1348பாடல் 1350 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்