நூல்கள்›திருக்குறள்›காமத்துப்பால்›களவியல்›குறிப்பறிதல்

2.குறிப்பறிதல்

10 குறள்கள்

1091விளக்கம் →

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

1092விளக்கம் →

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது.

1093விளக்கம் →

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.

1094விளக்கம் →

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.

1095விளக்கம் →

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்

1096விளக்கம் →

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்.

1097விளக்கம் →

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

1098விளக்கம் →

அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.

1099விளக்கம் →

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.

1100விளக்கம் →

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல.

← தகையணங்குறுத்தல்புணர்ச்சிமகிழ்தல் →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்