நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›ஒழிபியல்›பெருமை

3.பெருமை

10 குறள்கள்

971விளக்கம் →

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்.

972விளக்கம் →

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

973விளக்கம் →

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்

கீழல்லார் கீழல் லவர்.

974விளக்கம் →

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

975விளக்கம் →

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல்.

976விளக்கம் →

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்

பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.

977விளக்கம் →

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்

சீரல் லவர்கண் படின்.

978விளக்கம் →

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து.

979விளக்கம் →

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல்.

980விளக்கம் →

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்

குற்றமே கூறி விடும்.

← மானம்சான்றாண்மை →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்