நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›மருந்து

22.மருந்து

10 குறள்கள்

941விளக்கம் →

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.

942விளக்கம் →

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

943விளக்கம் →

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

944விளக்கம் →

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.

945விளக்கம் →

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

946விளக்கம் →

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபேர் இரையான்கண் நோய்.

947விளக்கம் →

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும்.

948விளக்கம் →

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

949விளக்கம் →

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.

950விளக்கம் →

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற் கூற்றே மருந்து.

← சூது
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்