நூல்கள்›திருக்குறள்›பொருட்பால்›அங்கவியல்›சூது

21.சூது

10 குறள்கள்

931விளக்கம் →

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

932விளக்கம் →

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்

நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

933விளக்கம் →

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்

போஒய்ப் புறமே படும்.

934விளக்கம் →

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

வறுமை தருவதொன்று இல்.

935விளக்கம் →

கவறும் கழகமும் கையும் தருக்கி

இவறியார் இல்லாகி யார்.

936விளக்கம் →

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்

முகடியான் மூடப்பட் டார்.

937விளக்கம் →

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்

கழகத்துக் காலை புகின்.

938விளக்கம் →

பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து

அல்லல் உழப்பிக்கும் சூது.

939விளக்கம் →

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்

அடையாவாம் ஆயங் கொளின்.

940விளக்கம் →

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்

உழத்தொறூஉம் காதற்று உயிர்.

← கள்ளுண்ணாமைமருந்து →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்