நூல்கள்›ஐங்குறுநூறு›பாடல் 2816

பாடல் 2816

வருவது கொல்லோ தனே வாராது

அவணுறை மேவலின் அமைவது கொல்லோ

புனவர் கொள்ளியின் புகல்வரும் மஞ்ஞை

இருவி யிருந்த குருவி வருந்துறப்

பந்தாடு மகளிரின் படர்தரும்

குன்றுகெழு நாடனொடு சென்றஎன் நெஞ்சே. . . . .

← பாடல் 2815பாடல் 2817 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்