பாடல் 2780
குன்றக் குறவன் காதல் மடமகள்
மன்ற வேங்கை மலர்சில கொண்டு
மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தித்
தேம்பலிச் செய்த ஈர்நறுங் கையள்
மலர்ந்த காந்தள் நாறிக்
கவிழ்ந்த கண்ணள்எம் அணங்கி யோளே. . . . .