நூல்கள்›பரிபாடல்›பாடல் 2513

பாடல் 2513

கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற

நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே;

தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்

வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே;

அடியுறைமகளிர் ஆடும் தோளே, . . . .

நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே;

வாகை ஒண் பூப் புரையும் முச்சிய

தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை,

'நீடன்மின் வாரும்' என்பவர் சொல் போன்றனவே;

நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன; . . . .

வெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின,

அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப;

நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்

வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்,

விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப் . . . .

பவழத்து அன்ன வெம் பூத் தாஅய்,

கார் மலிந்தன்று, நின் குன்று போர் மலிந்து,

செவ்வேள்

← பாடல் 2512பாடல் 2514 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்