பாடல் 2509
மலைவரை மாலை அழி பெயல் _ _ _ காலை,
செல வரை காணாக் கடல்தலைக் கூட _ _ _
நில வரை அல்லல் நிழத்த, விரிந்த
பலவுறு போர்வைப் பரு மணல் மூஉய்,
வரி அரி ஆணு முகிழ் விரி சினைய . . . .
மாந் தீம் தளிரொடு வாழையிலை மயக்கி,
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉப், பறை அறையப்
போந்தது _ _ _ வையைப் புனல்.
வையை