நூல்கள்›புறநானூறு›பாடல் 2499

பாடல் 2499

மாசு விசும்பின் வெண் திங்கள்

மூ வைந்தான் முறை முற்றக்,

கடல் நடுவண் கண்டன்ன என்

இயம் இசையா, மரபு ஏத்திக்

கடைத் தோன்றிய கடைக் கங்குலான் . . . .

பலர் துஞ்சவும் தான் துஞ்சான்,

உலகு காக்கும் உயர் கொள்கை,

கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே;

கேட்டற் கொண்டும், வேட்கை தண்டாது:

தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி, . . . .

மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்

.. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. லவான

கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி,

நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து;

போ தறியேன், பதிப் பழகவும், . . . .

தன்பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர்

பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ;

மறவர் மலிந்ததன் .. .. .. .. .. .. .. .. .. ..

கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து,

இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம் . . . .

தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத்,

துறைதொறும் பிணிக்கும் நல்லூர்,

உறைவின் யாணர், நாடுகிழ வோனே!

உலகு காக்கும் உயர் கொள்கை!

← பாடல் 2498பாடல் 2500 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்