நூல்கள்›புறநானூறு›பாடல் 2498

பாடல் 2498

அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்

தொடிமாண் உலக்கைப் பருஉக்குற் றரிசி

காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்

ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி,

மோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை, . . . .

செறுவின் வள்ளை, சிறுகொடிப் பாகல்,

பாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன,

மெய்களைந்து, இன்னொடு விரைஇ.....

மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்,

அழிகளிற் படுநர் களியட வைகின், . . . .

பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்

காவிரிக் கிழவன், மாயா நல்லிசைக்

கிள்ளி வளவன் உள்ளி, அவன்படர்தும்;

செல்லேன் செல்லேன், பிறர்முகம் நோக்கேன்;

நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக், . . . .

கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்

பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன், அழிவுகொண்டு,

ஒருசிறை இருந்தேன்; என்னே! இனியே,

அறவர் அறவன், மறவர் மறவன்,

மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன், . . . .

இசையிற் கொண்டான், நசையமுது உண்க என,

மீப்படர்ந்து இறந்து, வன்கோல் மண்ணி,

வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை

விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை,

அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக், . . . .

கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்;

கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்

பகடே அத்தை யான் வேண்டிவந் தது என,

ஒன்றியான் பெட்டா அளவை, அன்றே

ஆன்று விட்டனன் அத்தை; விசும்பின் . . . .

மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை

ஊர்தியொடு நல்கி யோனே; சீர்கொள

இழுமென இழிதரும் அருவி,

வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே.

கடவுட்கும் தொடேன்!

← பாடல் 2497பாடல் 2499 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்