நூல்கள்›புறநானூறு›பாடல் 2477

பாடல் 2477

தென் பரதவர் மிடல் சாய,

வட வடுகர் வாள் ஓட்டிய

தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்,

கடுமா கடை இய விடுபரி வடிம்பின்,

நற்றார்க் கள்ளின், சோழன் கோயில், . . . .

புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,

பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்

அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,

எஞ்சா மரபின் வஞ்சி பாட,

எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல, . . . .

மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை

தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு,

இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,

விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,

செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும், . . . .

அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை,

நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு, . . . .

அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே,

இருங்குளைத் தலைமை எய்தி,

அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.

எஞ்சா மரபின் வஞ்சி!

← பாடல் 2476பாடல் 2478 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்