நூல்கள்›புறநானூறு›பாடல் 2475

பாடல் 2475

விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்

பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி

சிறுநனி பிறந்த பின்றைச், செறிபிணிச்

சிதாஅர் வள்பின்என் தடாரி தழீஇப்,

பாணர் ஆரும் அளவை, யான்தன் . . . .

யாணர் நல்மனைக் கூட்டு முதல் நின்றனென்!

இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரெனக்,

குணக்கு எழு திங்கள் கனைஇருள் அகற்றப்,

பண்டுஅறி வாரா உருவோடு, என் அரைத்

தொன்றுபடு துளையொடு பருஇழை போகி, . . . .

நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி,

விருந்தினன் அளியன், இவன் எனப், பெருந்தகை

நின்ற முரற்கை நீக்கி, நன்றும்

அரவுவெகுண் டன்ன தேறலொடு, சூடுதருபு,

நிரயத் தன்னஎன் வறன்களைந் தன்றே, . . . .

இரவி னானே, ஈத்தோன் எந்தை;

அற்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்,

இரப்பச் சிந்தியேன், நிரப்படு புணையின்;

உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்;

நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி, . . . .

ஒருநாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை,

ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்,

தோன்றல் செல்லாது, என் சிறுகிணைக் குரலே.

கிணைக்குரல் செல்லாது!

← பாடல் 2474பாடல் 2476 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்