நூல்கள்›புறநானூறு›பாடல் 2473

பாடல் 2473

கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும்

புல்வாய் இரலை நெற்றி யன்ன,

பொலம் இலங்கு சென்னிய பாறுமயிர் அவியத்

தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,

மன்றப் பலவின் மால்வரைப் பொருந்தி, என் . . . .

தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி,

இருங்கலை ஓர்ப்ப இசைஇக், காண்வரக்,

கருங்கோற் குறிஞ்சி அடுக்கம் பாடப்,

புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறா அர்

மான்கண் மகளிர், கான்தேர் அகன்று உவா . . . .

சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை,

விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம்,

புகர்முக வேழத்து முருப்பொடு, மூன்றும்,

இருங்கேழ் வயப்புலி வரி அதள் குவைஇ,

விரிந்து இறை நல்கும் நாடன், எங்கோன், . . . .

கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல,

வண்மையும் உடையையோ? ஞாயிறு!

கொன்விளங் குதியால் விசும்பி னானே!

அண்டிரன் போல்வையோ ஞாயிறு?

← பாடல் 2472பாடல் 2474 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்