பாடல் 2455
களரி பரந்து, கள்ளி போகிப்
பகலும் கூஉம் கூகையொடு பேழ்வாய்
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சு வந்தன்று, இம் மஞ்சுபடு முதுகாடு,
நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் . . . .
என்பு படு சுடலை வெண்ணீறு அவிப்ப,
எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன் புறம் காண்போர்க் காண்பு அறியாதே!
காதலர் அழுத கண்ணீர்!