நூல்கள்›புறநானூறு›பாடல் 2451

பாடல் 2451

தேஎங் கொண்ட வெண்மண் டையான்,

வீ .. .. .. .. .. .. .. .. .. கறக்குந்து;

அவல் வகுத்த பசுங் குடையான்,

புதன் முல்லைப் பூப்பறிக் குந்து;

ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் . . . .

குன்றுஏறிப் புனல் பாயின்

புறவாயால் புனல்வரை யுந்து;

.. .. .. .. .. .. .. நொடை நறவின்

மாவண் தித்தன் வெண்ணெல் வேலி

உறந்தை அன்ன உரைசால் நன்கலம் . . . .

கொடுப்பவும் கொளாஅ னெ.. ..

.. .. .. .. .. ர்தந்த நாகிள வேங்கையின்,

கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்

மாக்கண் மலர்ந்த முலையள்; தன்னையும்

சிறுகோல் உளையும் புரவி .. .. .. .. .. . . . .

.. .. .. .. .. .. .. .. .. .. .. .. யமரே.

தித்தன் உறந்தை யன்ன!

← பாடல் 2450பாடல் 2452 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்