நூல்கள்›புறநானூறு›பாடல் 2438

பாடல் 2438

வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு

மடலை மாண்நிழல் அசைவிடக், கோவலர்

வீததை முல்லைப் பூப்பறிக் குந்து;

குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்

நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து; . . . .

தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்

கடல் ஆடிக் கயம் பாய்ந்து,

கழி நெய்தற் பூக் குறூஉந்து;

பைந்தழை துயல்வருஞ் செறுவிறற்

.. .. .. .. .. .. .. .. .. .. . . .. லத்தி . . . .

வளர வேண்டும், அவளே, என்றும்

ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி,

முறஞ்செவி யானை வேந்தர்

மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே.

வளரவேண்டும் அவளே!

← பாடல் 2437பாடல் 2439 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்