நூல்கள்›புறநானூறு›பாடல் 2423

பாடல் 2423

வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்

புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்,

வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்

சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்

ஊக நுண்கோற் செறித்த அம்பின், . . . .

வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்,

பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்

புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க்,

குமிழ்உண் வெள்ளைப் பகுவாய் பெயர்த்த

வெண்வாழ் தாய வண்காற் பந்தர், . . . .

இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்,

பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை,

வலம்படு தானை வேந்தற்கு

உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே.

உலந்துழி உலக்கும்!

← பாடல் 2422பாடல் 2424 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்