பாடல் 2422
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
கா .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை,
வெள்வேல் ஆவம்ஆயின், ஒள் வாள் . . . .
கறையடி யானைக்கு அல்லது
உறைகழிப் பறியா,வேலோன் ஊரே.
உள்ளியது சுரக்கும் ஈகை!