நூல்கள்›புறநானூறு›பாடல் 2417

பாடல் 2417

கொய்யடகு வாடத், தருவிறகு உணங்க,

மயில்அம் சாயல் மாஅ யோளொடு

பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே

மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்,

பாணர் நரம்பின் சுகிரொடு, வயமான் . . . .

குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்,

பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன்

புன்புறப் பெடையொடு வதியும்

யாணர்த்து ஆகும் - வேந்துவிழு முறினே.

பெடையொடு வதியும்!

← பாடல் 2416பாடல் 2418 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்