நூல்கள்›புறநானூறு›பாடல் 2374

பாடல் 2374

கோட்டம் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்,

வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்,

ஒத்தன்று மாதோ, இவற்கே; செற்றிய

திணிநிலை அலறக் கூவை போழ்ந்து , தன்

வடிமாண் எகம் கடிமுகத்து ஏந்தி, . . . .

ஓம்புமின், ஓம்புமின், இவண்! ஓம்பாது

தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்,

கன்றுஅமர் கறவை மான;

முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.

தன் தோழற்கு வருமே!

← பாடல் 2373பாடல் 2375 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்