நூல்கள்›புறநானூறு›பாடல் 2324

பாடல் 2324

தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய,

இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்,

கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர,

நிலமார் வையத்து வலமுறை வளைஇ,

வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையொடு, . . . .

ஆற்றல் என்பதன் தோற்றம் கேள், இனிக்

கள்ளி போகிய களரியம் பறந்தலை,

முள்ளுடை வியன்காட் டதுவே - நன்றும்

சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்?

இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத், . . . .

தூக்கணம் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப

ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி,

ஞாலங் காவலர் கடைத்தலைக்,

காலைத் தோன்றினும் நோகோ யானே.

வலம்புரி ஒலித்தது!

← பாடல் 2323பாடல் 2325 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்