பாடல் 2232
மெல்லியல் விறலி! நீ நல்லிசை செவியில்
கேட்பின் அல்லது காண்பு அறியலையே,
காண்டல் வேண்டினை ஆயின், மாண்ட நின்
விரை வளர் கூந்தல் வரை வளி உளரக்
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி, . . . .
மாரியன்ன வண்மைத்
தேர் வேள் ஆயைக் காணிய சென்மே.
காணச் செல்க நீ!