நூல்கள்›புறநானூறு›பாடல் 2225

பாடல் 2225

ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு,

பாணர் சென்னி பொலியத் தைஇ,

வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்

ஓடாப் பூட்கை உரவோன் மருக!

வல்ல்ஞ்ம் அல்லேம் ஆயினும், வல்லே . . . .

நின்வயிற் கிளக்குவம் ஆயின், கங்குல்

துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்,

பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருநர்

தெறலரு மரபின் நின் கிளையொடும் பொலிய,

நிலமிசைப் பரந்த மக்கட்டு எல்லாம் . . . .

புலன் அழுக்கு அற்ற அந்த ணாளன்,

இரந்து சென் மாக்கட்கு இனி இடன் இன்றிப்,

பரந்து இசை நிறகப் பாடினன், அதற்கொண்டு

சினமிகு தானை வானவன் குடகடல்,

பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ் வழிப், . . . .

பிறகலம் செல்கலாது அனையேம் அத்தை,

இன்மை துரப்ப, அசை தர வந்து, நின்

வண்மையின் தொடுத்தனம், யாமே; முள்ளெயிற்று

அரவுஎறி உருமின் முரசெழுந்து இயம்ப,

அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய, . . . .

அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும்

நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்

பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே!

கபிலனும் யாமும்!

← பாடல் 2224பாடல் 2226 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்