நூல்கள்›புறநானூறு›பாடல் 2166

பாடல் 2166

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!

ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்

நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்,

கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்

மையல் மாலை யாம் கையறுபு இனையக், . . . .

குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி,

வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது

சோழ நன்னாட்டுப் படினே, கோழி

உயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ,

வாயில் விடாது கோயில் புக்கு, எம் . . . .

பெருங் கோக் கிள்ளி கேட்க, இரும்பிசிர்

ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்

இன்புறு பேடை அணியத், தன்

அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.

அன்னச் சேவலே!

← பாடல் 2165பாடல் 2167 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்