நூல்கள்›புறநானூறு›பாடல் 2124

பாடல் 2124

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல

ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது,

உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு,

நிலவுத்திகழ் மதியமொடு, நிலஞ்சேர்ந் தாஅங்கு,

உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை . . . .

அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்,

பிணியுறு முரசம் கொண்ட காலை,

நிலைதிரிபு எறியத், திண்மடை கலங்கிச்

சிதைதல் உய்ந்தன்றோ, நின்வேல்; செழிய!

முலைபொலி அகம் உருப்ப நூறி, . . . .

மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்

ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,

அவிர் அறல் கடுக்கும் அம் மென்

குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே.

கூந்தலும் வேலும்!

← பாடல் 2123பாடல் 2125 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்