நூல்கள்›புறநானூறு›பாடல் 2119

பாடல் 2119

இரு முந்நீர்க் குட்டமும்,

வியன் ஞாலத்து அகலமும்,

வளி வழங்கு திசையும்,

வறிது நிலைஇய காயமும், என்றாங்கு

அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை; . . . .

அறிவும், ஈரமும், பெருங்க ணோட்டமும்;

சோறு படுக்கும் தீயோடு

செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது

பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே;

திருவில் அல்லது கொலைவில் அறியார்; . . . .

நாஞ்சில் அல்லது படையும் அறியார்;

திறனறி வயவரொடு தெவ்வர் தேய, அப்

பிறர்மண் உண்ணும் செம்மல்; நின் நாட்டு

வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது,

பகைவர் உண்ணா அருமண் ணினையே; . . . .

அம்பு துஞ்சும்கடி அரணால்,

அறம் துஞ்சும் செங்கோலையே;

புதுப்புள் வரினும், பழம்புள் போகினும்,

விதுப்புற அறியா ஏமக் காப்பினை;

அனையை ஆகல் மாறே, . . . .

மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.

மண்ணும் உண்பர்!

← பாடல் 2118பாடல் 2120 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்