நூல்கள்›புறநானூறு›பாடல் 2118

பாடல் 2118

இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்

தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து,

மன்உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்.

நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய!

இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய . . . .

பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி,

முயங்கினேன் அல்லனோ யானே! மயங்கிக்

குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல,

அம்புசென்று இறுத்த அறும்புண் யானைத்

தூம்புஉடைத் தடக்கை வாயொடு துமிந்து . . . .

நாஞ்சில் ஒப்ப, நிலமிசைப் புரள,

எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்

எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்;

இன்ன விறலும் உளகொல், நமக்கு? என,

மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணிக் . . . .

கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை,

எழுவர் நல்வலங் கடந்தோய்! நின்

கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?

எழுவரை வென்ற ஒருவன்!

← பாடல் 2117பாடல் 2119 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்