நூல்கள்›புறநானூறு›பாடல் 2110

பாடல் 2110

அரி மயிர்த் திரள் முன்கை

வால் இழை, மட மங்கையர்

வரி மணற் புனை பாவைக்குக்

குலவுச் சினைப் பூக் கொய்து

தண் பொருநைப் புனல் பாயும் . . . .

விண் பொருபுகழ், விறல்வஞ்சிப்

பாடல் சான்ற விறல்வேந் தனும்மே

வெப் புடைய அரண் கடந்து,

துப்புறுவர் புறம்பெற் றிசினே:

புறம் பொற்ற வய வேந்தன் . . . .

மறம் பாடிய பாடினி யும்மே,

ஏர் உடைய விழுக் கழஞ்சின்,

சீர் உடைய இழை பெற்றிசினே!

இழை பெற்ற பாடி னிக்குக்

குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே . . . .

என ஆங்கு,

ஒள்அழல் புரிந்த தாமரை

வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.

பெற்றனர்! பெற்றிலேன்!

← பாடல் 2109பாடல் 2111 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்