நூல்கள்›புறநானூறு›பாடல் 2100

பாடல் 2100

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்

வண்ண மார்பின் தாருங் கொன்றை;

ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த

சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;

கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை . . . .

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;

பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை

பதினெண் கணனும் ஏத்தவும் படுமே; . . . .

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,

நீரறவு அறியாக் கரகத்துத்,

தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

இறைவனின் திருவுள்ளம்!

← பாடல் 2099பாடல் 2101 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்