நூல்கள்›அகநானூறு›பாடல் 2094

பாடல் 2094

சேந்தன் கண்ணனார்

கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப,

எறி திரை ஓதம் தரல் ஆனாதே;

துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின்

இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப,

வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே; . . . .

கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி

வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது,

ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச்

சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப!

இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி, . . . .

வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர்

ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென,

கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்

குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண்,

உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே! . . . .

நித்திலக் கோவை

← பாடல் 2093பாடல் 2095 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்